ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுகவினர் தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜைகள்
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், மீண்டும் தமிழகத்தில் இபிஎஸ் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தைப்பூசத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார், முன்னாள் ஆற்காடு எம்எல்ஏ சீனிவாசன், திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சொரையூர் குமார், ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் வளவனூர் அன்பழகன், ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் தாழனூர் சாரதி(எ) ஜெயச்சந்திரன், கலவை நகர செயலாளர் சதீஷ் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

தொடர்ந்து, கோயில் வளாகத்தில் தங்கத்தேர் இழுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார், "தமிழ்நாட்டில் மீண்டும் இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையுடன், தைப்பூசத்தையொட்டி இந்த சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினோம். மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால், எந்த சவால்களையும் நாம் கடந்து வெற்றி பெறலாம்" என்று கூறினார்.