Maruti Suzuki Grand Vitara Price, Launch Date 2022

மாருதி சுசூகி நிறுவனத்தில் இருந்து முதன் முதலாக நடுத்தர ரக எஸ்யுவியாக களமிறக்கப்பட்டதுதான், கிராண்ட் விட்டாரா. எதிர்வரும் பண்டிகை சீசனை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்தது இந்த நிறுவனம். 

முன்பதிவு துவங்கியதில் இருந்தே நல்ல வரவேற்பு உள்ளதாக இந்த நிறுவனம் கூறுகிறது. நடுத்தர எஸ்யுவி என்பது மட்டுமின்றி, ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வந்துள்ளதும் ஒரு காரணம். 

இரண்டு விதமான பெட்ரோல் இன்ஜின் வகைகளில் இது கிடைக்கிறது. ஒன்று, 1.5 லிட்டர் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் கொண்டது. இது அதிகபட்சமாக 100 எச்பி பவரையும், 135 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மற்றொன்று 1.5 லிட்டர் இன்ஜின் கொண்ட ஸ்டிராங் ஹைபிரிட். இது 114 எச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. 

அதிகபட்சமாக 28 கி.மீ மைலேஜ் தரும் என்கிறது மாருதி நிறுவனம். இந்த கார் சிக்மா, டெல்டா, ஜீட்டா. ஆல்பா, ஆல்பா ஆல் வீல் டிரைவ் என 5 வேரியண்ட்களில் வருகிறது எனவும், துவக்க வேரியண்ட்டான சிக்மா மேனுவல் ஷோரூம் விலை சுமார் 9.5 லட்சம் எனவும், டாப் வேரியண்ட் ஆல்பா ஆல் வீல் டிரைவ் சுமார் 15.5 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.