வேலுார் மாவட்டம் காட்பாடியில், தமிழக - ஆந்திரா மாநிலத்தை இணைக்கும் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இப்பாலத்தில் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், வரும் ஜூன், 1ம் தேதி முதல் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

காட்பாடி: ஜூன் 1 முதல் தடை!

இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலுாரிலிந்து ஆந்திரா மாநிலம் சித்துார் செல்லும் வாகனங்கள், சேர்க்காடு வழியாகவும், தென் மாவட்டங்களிலிருந்து திருவண்ணாமலை வழியாக செல்லும் வாகனங்கள் போளூர், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சேர்க்காடு வழியாகவும், கிருஷ்ணகிரியிலிருந்து சித்துார் செல்லும் வாகனங்கள் பள்ளிகொண்டா, குடியாத்தம் வழியாகவும் செல்ல வேண்டும். இதே வழியாக, சித்துாரிலிருந்து வரும் வாகனங்களும் செல்லலாம் என கூறினர்.