லாலாப்பேட்டை அருகே உள்ள கத்தாரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் நேற்று காலை லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை அருகே உள்ள கத்தாரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேலு (76). இவர் நேற்று காலை சொந்த வேலை விஷயமாக பைக்கில் ராணிப்பேட்டைக்கு வந்து திரும்பவும் கத்தாரிக்குப்பம் நோக்கி கொண்டிருந்தார்.
அப்போது ராணிப்பேட்டை காரை கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி குமரவேலு மீது மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாமலை,வாசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவம்னைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.