குறள் : 1213

நனவினால் நல்கா தவரைக் கனவினால்

காண்டலின் உண்டென் உயிர்.


மு.வ உரை :

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

கலைஞர் உரை :

நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை :

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.


Kural 1213

Nanavinaal Nalkaa Thavaraik Kanavinaal

Kaantalin Unten Uyir

Explanation :

My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.


Horoscope Today: Astrological prediction for August 25, 2023


இன்றைய ராசிப்பலன் - 25.08.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

25-08-2023, ஆவணி 08, வெள்ளிக்கிழமை, நவமி திதி பின்இரவு 02.03 வரை பின்பு வளர்பிறை தசமி. அனுஷம் நட்சத்திரம் காலை 09.14 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் காலை 09.14 வரை பின்பு மரணயோகம். வரலட்சுமி விரதம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Ragu Kalam

பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 


இன்றைய ராசிப்பலன் - 25.08.2023 

மேஷம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

மிதுனம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சேமிப்பு உயரும்.

கடகம்

இன்று உத்தியோக ரீதியாக பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.

சிம்மம்

இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி

இன்று உங்களுக்கு இருக்கும் மனக்குழப்பங்கள் விலகி நிம்மதி ஏற்படும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவுடன் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். சுபகாரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கொடுக்கல்& வாங்கல் லாபகரமாக இருக்கும்.

துலாம்

இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

விருச்சிகம்

இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

தனுசு

இன்று நீங்கள் செய்ய நினைத்த காரியம் பாதியில் தடைப்படும் சூழல் அமையும். பிள்ளைகள் வகையில் சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும்.

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும்ழழாழழ வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

கும்பம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் அலைச்சல், எதிர்பாராத செலவுகள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது தெம்பை தரும்.



கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026