ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் புதுப்பேட்டை 3 வது தெருவைச் சேர்ந்தவர் உஸ்மான் ( 45 ) . ஆட்டோ டிரைவர் . இவர் கடந்த 3 ம் தேதி மாலை தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆற்காட்டில் விட்டுவிட்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக மீண்டும் மேல்விஷாரம் சென்றார்.

வேப்பூரில் உள்ள தனியார் பள்ளி எதிரே சென்ற போது பின்னால் வேகமாக வந்த வேன் ஆட்டோ மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது . இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உஸ்மான் படுகாயம் அடைந்தார் . அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் . அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து அவரது மனைவி தில்ஷாக் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார் . அதன்பேரில் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் வழக்கு பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற வேன் டிரைவரை தேடி வருகிறார்.