குறள் : 1214
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
மு.வ உரை :
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.
கலைஞர் உரை :
நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.
சாலமன் பாப்பையா உரை :
நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.
Kural 1214
Kanavinaan Untaakum Kaamam Nanavinaan
Nalkaarai Naatith Thararku
Explanation :
There is pleasure in my dream because in it I seek and obtain him who does not visit me in my wakefulness.
Horoscope Today: Astrological prediction for August 27, 2023
இன்றைய ராசிப்பலன் - 27.08.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
27-08-2023, ஆவணி 10, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி இரவு 09.33 வரை பின்பு வளர்பிறை துவாதசி. மூலம் நட்சத்திரம் காலை 07.16 வரை பின்பு பூராடம் நட்சத்திரம் பின்இரவு 05.15 வரை பின்பு உத்திராடம். அமிர்தயோகம் காலை 07.16 வரை பின்பு சித்தயோகம் பின்இரவு 05.15 வரை பின்பு அமிர்தயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 27.08.2023 | Today rasi palan - 27.08.2023
மேஷம்
இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறும். ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும்.
ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை.
மிதுனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
கடகம்
இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் லாபகரமாக இருக்கும்.
சிம்மம்
இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். கடன் பிரச்சினை சற்று குறையும்.
கன்னி
இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாகவே இருக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடங்கல்கள் ஏற்படலாம். திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
துலாம்
இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பெரியோர்களால் அனுகூலம் உண்டாகும். வருமானம் பெருகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் வயதில் பெரியவர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
தனுசு
இன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
மகரம்
இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். வீட்டில் பெண்களின் பணிச்சுமை சற்று குறையும்.
கும்பம்
இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
மீனம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.