குறள் : 1215
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.
மு.வ உரை :
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்றுளூ இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.
கலைஞர் உரை :
காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!.
சாலமன் பாப்பையா உரை :
முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.
Kural 1215
Nanavinaal Kantadhooum Aange Kanavundhaan
Kanta Pozhudhe Inidhu
Explanation :
I saw him in my waking hours and then it was pleasant; I see him just now in my dream and it is (equally) pleasant.
Horoscope Today: Astrological prediction for August 28, 2023
இன்றைய ராசிப்பலன் - 28.08.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
28-08-2023, ஆவணி 11, திங்கட்கிழமை, துவாதசி திதி மாலை 06.23 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 02.43 வரை பின்பு திருவோணம். மரணயோகம் பின்இரவு 02.43 வரை பின்பு அமிர்தயோகம். பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன்- 28.08.2023 | Today rasi palan - 28.08.2023
மேஷம்
இன்று உங்களுக்கு வேலையில் எதிர்பாராத இனிய நிகழ்வு நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு கூட்டாளிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும்.
ரிஷபம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 10.39 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் மதியத்திற்கு பின் நற்பலன் கிடைக்கும். பணப்பிரச்சினைகள் குறையும்.
மிதுனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு காலை 10.39 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பதும், வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது.
கடகம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வருமானம் பெருகும்.
கன்னி
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மனகஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும்.
துலாம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும்.
மகரம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படும். வியாபாரத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற நற்பலன்கள் கிட்டும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.