திருமங்கலத்தை சேர்ந்த தாயும், மகளும் ஒரே மையத்தில் இன்று நடைபெற உள்ள டிஎன் பிஎஸ்சி தேர்வை எழுத உள்ளனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம், என்ஜிஓ நகரை சேர்ந்தவர் ரவி. ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி வளர்மதி (47). பிஏ தமிழ் முடித்துள்ளார். இவரது மகள் சத்யபிரியா. நீட் தேர்வுக்கு படித்து வந்தார். இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வை சத்யபிரியா எழுத முடிவு செய்தார். அதே நேரத்தில் தனது தாயும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வேண்டுமென மகள் சத்யபிரியா வற்புறுத்தினார். இதையடுத்து வளர்மதியும் தேர்வுக்கு விண்ணப்பித்தார். தற்போது இருவருக்கும் ஒரே தேர்வு மையமாக கள்ளிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருவரும் இன்று தேர்வு எழுதுகின்றனர்.


A mother and daughter from Thirumangalam are going to write the TNLSC exam to be held today at the same centre.

Ravi hails from Tirumangalam, an NGO town in Madurai district. He retired after serving in the army. Wife Varamathi (47). Completed BA in Tamil. His daughter is Sathyapriya. She was studying for NEET. Sathyapriya decided to write TNPSC exam today. At the same time, daughter Sathyapriya insisted that her mother also appear for the TNPSC exam. After this Varamathi also applied. At present, the TNPSC exam writing center has been allocated in Kallikkudi Government Higher Secondary School as a single examination center for both of them. Both are writing the exam today.