சோளிங்கர்: இருசக்கர வாகனம் மீது மோதிய வேன் - இருவர் படுகாயம், ஒருவர் பலி

சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் மீது எதிரே வந்த வேன் மோதிய விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் (45), துரை (54) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கொடைக்கல் கிராமத்திலிருந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த வேன், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் முத்துக்குமார், துரை ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது முத்துக்குமார் வழியிலேயே இறந்துவிட்டார். துரைக்கு கிச்சை அளித்து அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கொண்டப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.