ராணிப்பேட்டையில் சினிமா செட் அமைப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியூட்டியுள்ளது.
கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த பிரபாகரன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரபாகரனின் மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பேரிழப்பாகும்.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபாகரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.