விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 43). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு பெங்களூர் நோக்கி சென்றார். பொய்கை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே லாரியை நிறுத்திவிட்டு, அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருநங்கைகள் 5 பேர் வேல்முருகனிடம் லாரியை ஓட்டிச் செல்லும்போது விபத்துகள் நடக்காமல் இருக்க மந்திரம் போடுவதாக கூறி அவரிடம் இருந்த ரூ. 5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து வேல்முருகன் விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார்.

 
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார், திருநங்கைகளான தன்ஷிகா, பிரியா உட்பட 5 பேரையும் கைது செய்தனர்.