ராணிப்பேட்டை மாவட்டத்தின் சமூக சேவகரும், உதவி என்று வந்தவர்களுக்கு எந்த நேரமாக இருந்தாலும் உதவி செய்யும் பண்பாளரூம், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லத்தின் செயலாளருமான அக்பர்ஷரீப் இன்று மாலை காலமானார்.

 
அவரது மறைவிற்கு ரத்தினகிரி அருள்மிகு பாலமுருகனடிமை சுவாமிகள் இரங்கல் தெரிவித்து மடல் வெளியிட்டுள்ளார்.

ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லம் சார்பில் தலைவர் லட்சுமணன், பொருளாளர் பக்தவச்சலம்‌, துணைத் தலைவர் பெனஸ் பாண்டியன், மற்றும் முதியோர் இல்லத்தை சேர்ந்தவர்களும், ராணிப்பேட்டை வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் தலைவர் பொன் சரவணன் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.