குறள் : 1164
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
மு.வ உரை :
காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.
கலைஞர் உரை :
காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை
சாலமன் பாப்பையா உரை :
காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள் மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான படகுதான் இல்லை.
Kural 1164
Kaamak Katalmannum Unte Adhuneendhum
Emap Punaimannum Il
Explanation :
There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with.
Horoscope Today: Astrological prediction for July 07, 2023
இன்றைய ராசிப்பலன் - 07.07.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
07-07-2023, ஆனி 22, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 12.18 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. சதயம் நட்சத்திரம் இரவு 10.16 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். அம்மன் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 07.07.2023 | Today rasi palan - 07.07.2023
மேஷம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும், பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள், பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். திருமண முயற்சிகளில் இருந்த மந்த நிலை நீங்கி அனுகூலப்பலன் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வங்கி சேமிப்பு உயரும். ஆன்மீக பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள்.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
சிம்மம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். திருமண சுபகாரியங்கள் கைகூடும்.
கன்னி
இன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். வியாபார வளர்ச்சிக்காக போட்ட திட்டங்களில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைத்து உங்கள் பிரச்சினைகள் குறையும்.
துலாம்
இன்று குடும்பத்தில் அமைதி குறையும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். பெரியோர்களின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை கொடுக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் லாபம் கிட்டும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். வேலையில் எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறையும். பணவரவு சுமாராக இருக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் பெருகும்.
மகரம்
இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றலாம். வீண் செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு மன நிம்மதியை தரும்.
கும்பம்
இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்சியை கொடுக்கும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவுகள் சுமாராக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். எதிர்பார்த்த உதவி தாமதமாக கிடைக்கும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை சற்று குறையும். எதிலும் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது.