ஆற்காடு அடுத்த லாடவரம் கிராமத்தைச் சேர்ந்த வர்நித்யா (19). இவரும் வாலாஜா அடுத்த பூண்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ்(23) என்றவாலி பரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு நித்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இதற்கிடையில் வீட்டை விட்டு வெளியேறிய நித்யா மற்றும் சந்தோஷ் ஆகியோர் கடந்த 22ம் தேதி பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இவர்களின் காதலுக்கு நித்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்ததால் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நேற்று ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் காதல் தம்பதியை ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.