👉 1932ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி சிட்னி துறைமுகப்பாலம் திறந்து வைக்கப்பட்டது.


👉 2008ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி இந்திய திரைப்பட நடிகர் ரகுவரன் மறைந்தார்.


நினைவு நாள் :-


ஆச்சார்ய கிருபளானி

👉இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆச்சார்ய கிருபளானி 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பாகிஸ்தான் சிந்து மாகாணத்திலுள்ள ஹைதராபாத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜீவித்ராம் பகவன்தாஸ் கிருபளானி.

👉இவர் ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் கலந்துகொண்டுள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். 1946ல் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

👉பின் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பிலிருந்தும், காங்கிரஸிலிருந்தும் விலகி, கிஷான் மஸ்தூர் பிரஜா பார்ட்டி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். பிறகு இவர் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். சமூக, சுற்றுச்சூழல் நலன்களுக்காக பணியாற்றி வந்த இவர் தனது 93வது வயதில் 1982ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


எம்.பி.என்.பொன்னுசாமி

🌷 தில்லானா மோகனாம்பாள் படத்தில் வருகின்ற நலம்தானா? என்கிற பாடலுக்கு நாதஸ்வரம் வாசித்தவர்களில் ஒருவரான எம்.பி.என்.பொன்னுசாமி 1933ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.

🌷 நமக்கெல்லாம் அந்த இனிய இசையை வழங்கிய மற்றொருவர் நாதஸ்வரக் கலைஞரான எம்.பி.என்.சேதுராமன் (எம்.பி.என்.பொன்னுசாமி சகோதரர்) ஆவார். பொன்னுசாமி ஒன்பதாவது வயதில் இருந்து தனது சகோதரருடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை செய்யத் தொடங்கினார்.

🌷 இவர் கலைமாமணி விருது, நாதஸ்வர கலாநிதி, சங்கீத சூடாமணி விருது, இசைப்பேரறிஞர் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

இன்றைய தின நிகழ்வுகள்


1279 – யாமென் சமரில் மங்கோலியரின் வெற்றியுடன் சீனாவில் சொங் அரசு முடிவுக்கு வந்தது.

1649 – இங்கிலாந்தில் பிரபுக்கள் அவையை மக்களுக்கு பயனற்றதும், ஆபத்தானதும் எனத் தெரிவித்து அதனை ஒழிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

1853 – தைப்பிங் மறுமலர்ச்சி இயக்கம் சீனாவைக் கைப்பற்றி நாஞ்சிங்கை அதன் தலைநகராக 1864 வரை வைத்திருந்தது.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டமைப்பின் மிகவும் ஆற்றல் மிக்கதாகக் கருதப்பட்ட ஜார்ஜியானா என்ற போர்க் கப்பல் தனது கன்னிப் பயணத்திலேயே மூழ்கியது. இதன் எச்சங்கள் 1963 ஆம் ஆண்டில் இதே நாளில் கண்டுபிடிக்கப்பட்டன.

1895 – லூமியேர் சகோதரர்கள் தாம் புதிதாக உருவாக்கிய திரைப்படக் கருவியின் மூலம் முதற்தடவையாக திரைப்படத் துண்டைப் பதிவு செய்தனர்.

1915 – புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.

1918 – அமெரிக்க காங்கிரஸ் நேர வலயங்களை நிறுவி பகலொளி சேமிப்பு நேரத்தை அங்கீகரித்தது.

1920 – அமெரிக்க மேலவை இரண்டாவது தடவையாக வெர்சாய் ஒப்பந்தத்ததி நிராகரித்தது (முதல் தடவை 1919 நவம்பர் 19 இல் நிராகரித்திருந்தது).

1931 – அமெரிக்காவின் நெவாடாவில் சூதாட்டம் சட்டபூர்வமாக்கப்படட்து.

1932 – சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியப் படைகள் அங்கேரியைக் கைப்பற்றின.

1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானில் பிராங்கிளின் என்ற அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 724 பேர் கொல்லப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியில் அனைத்துத் தொழிற்சாலைகள், இராணுவத் தளங்கள், தொடர்பு வசதிகள் அழிக்கப்பட வேண்டும் என இட்லர் ஆணையிட்டார்.

1946 – பிரெஞ்சு கயானா, குவாதலூப்பு, மர்தினிக்கு, ரீயூனியன் ஆகியன பிரான்சின் வெளிநாட்டு மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன.

1958 – நியூயார்க்கில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியதில் 24 பேர் உயிரிழந்தனர்.

1962 – அல்சீரியா விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

1964 – பிரேசிலில் அரசுக்கு எதிராகவும் கம்யூனிசத்திற்கு எதிராகவும் 500,000 மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1965 – 1863 இல் இதே நாளில் கடலில் மூழ்கிய $50,000,000 பெறுமதியான ஜார்ஜியானா கப்பலின் எச்சங்கள் 102 ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கப்பட்டன.

1972 – இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

1982 – போக்லாந்து போர்: அர்கெந்தீனப் ப் படையினர் தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர்.

1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.

2002 – ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது.

2002 – சிம்பாப்வே மனித உரிமை மீறல்கள், தேர்தல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக பொதுநலவாயத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டது.

2004 – பால்ட்டிக் கடலில் 1952 இல் உருசிய மிக்-15 விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட சுவீடனின் டிசி-3 விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

2004 – சீன குடியரசின் அரசுத்தலைவர் சென் சூயி-பியான் சுடப்பட்டார்.

2008 – ஜிஆர்பி 080319பி என்ற அண்ட வெடிப்பு அவதானிக்கப்பட்டது.

2011 – லிபிய உள்நாட்டுப் போர்: கடாபியின் படைகள் பங்காசி நகரைக் கைப்பற்றத் தவறியதை அடுத்து, பிரெஞ்சு வான் படை லிபியா மீது தாக்குதலை ஆரம்பித்தது.

2013 – ஈராக்க்கில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 98 பேர் கொல்லப்பட்டனர், 240 பேர் காயமடைந்தனர்.

2016 – பிளைதுபாய் 981 விமானம் உருசியாவில் ரஸ்தோவ் வானூர்தி நிலையத்தில் தரையிறங்கும் போது மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 62 பேரும் உயிரிழந்தனர்.

2018 – சூடான் என அழைக்கப்படும் கடைசி ஆண் வடக்கு வெள்ளை காண்டாமிருகம் இறந்தது.

இன்றைய தின பிறப்புகள்


1077 – அப்துல் காதிர் அல்-ஜிலானி, ஈராக்கிய சூபி அறிஞர் (இ. 1165)

1206 – குயுக் கான், மங்கோலியப் பேரரசர், 3வது கான் (இ. 1248)

1844 – மினா கேந்த், பின்லாந்து ஊடகவியலாளர் (இ. 1897)

1883 – நார்மன் ஏவொர்த், பிரித்தானிய வேதியியலாளர் (இ. 1950)

1903 – வி. ஏ. அழகக்கோன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1973)

1906 – அடோல்வ் ஏச்மென், செருமானிய சுத்ஸ்டாப்பெல் அதிகாரி (இ. 1962)

1919 – டி. கே. பட்டம்மாள், தமிழக கருநாடக இசைப் பாடகி (இ. 2009)

1922 – ஹிரூ ஒனோடா, சப்பானிய இராணுவ அதிகாரி (இ. 2014)

1928 – விக்கிரமன், தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (இ. 2015)

1928 – ஆ. கந்தையா, ஈழத்துத் தமிழறிஞர், எழுத்தாளர், கல்வியாளர் (இ. 2011)

1933 – குமரி அனந்தன், தமிழக அரசியல்வாதி, தமிழறிஞர்

1933 – எம். பி. என். பொன்னுசாமி, தமிழக நாதசுவரக் கலைஞர்

1943 – மார்யோ மோன்டி, இத்தாலியப் பிரதமர்

1952 – மோகன் பாபு, தெலுங்கு நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி

1978 – ரங்கன ஹேரத், இலங்கைத் துடுப்பாட்ட வீரர்

1984 – தனுஸ்ரீ தத்தா, இந்திய நடிகை

இன்றைய தின இறப்புகள்


1406 – இப்னு கல்தூன், துனீசிய வரலாற்றாளர் (பி. 1332)

1890 – குருதத்த வித்யார்த்தி, இந்திய சமூக சேவகர், கல்வியாளர், ஆரியசமாசத்தின் தலைவர் (பி. 1864)

1927 – அம்மாசத்திரம் கண்ணுசுவாமி பிள்ளை, தமிழகத் தவில் கலைஞர் (பி. 1876)

1950 – எட்கர் ரைசு பர்ரோசு, அமெரிக்கப் போர் வீரர், எழுத்தாளர் (பி. 1875]])

1978 – மடபூஷிய அனந்தசயனம், இந்திய அரசியல்வாதி (பி. 1891)

1979 – அ. நாகலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1901)

1982 – ஆச்சார்ய கிருபளானி, இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1888)

1987 – லூயி டே பிராலி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1892)

1988 – எஸ். இராமநாதன், தமிழக கருநாடக வாய்ப்பாட்டு, வீணைக் கலைஞர் (பி. 1917)

1998 – சித்தி ஜுனைதா பேகம், தமிழக முஸ்லிம் பெண் எழுத்தாளர் (பி. 1917)

1998 – ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு, கேரளத்தின் 1வது முதலமைச்சர் (பி. 1909)

2008 – ஆர்தர் சி. கிளார்க், பிரித்தானிய-இலங்கை அறிபுனை எழுத்தாளர் (பி. 1917)

2008 – ரகுவரன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1948)

இன்றைய தின சிறப்பு நாள்


புனித யோசேப்பு நாள் (கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம்)