Kethara Gauri Fast Worship at Walaja Sundara Vinayagar Temple


வாலாஜாவில் கேதார கவுரி விரதத்தை முன்னிட்டு நேற்று சுந்தர விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தீபாவளி கொண்டாடிய மக்கள் அதன் மறுநாளான நேற்று அமாவாசை மற்றும் கேதார கவுரி விரதம் அனுசரித்தனர். கேதாரம் என்பது இமயமலை சாரலை குறிப்பதாகும். அதாவது மலையை சார்ந்த பகுதியை கேதாரம் என்பர். இங்கு சுயம்பு லிங்கமாக கேதாரேசுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதிதேவி சிவனை அந்த சுயம்புலிங்கத்தை விரதமிருந்து வழிபட்டார். அதன் பலனாக சிவனின் பாதியாகும் வரத்தை பெற்றார். அந்த நாளே கேதார கவுரி விரத நாளாக அனுசரிக்கப்படுகிறது. நேற்று மாலை சூரிய கிரகணத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று மதியம் 12 மணி வரை நோன்பு வழிபாடு நடந்தது. 

தொடர்ந்து நேற்று காலை வாலாஜா சுந்தர விநாயகர் கோயில் மண்டபத்தில் கவுரியம்மன் அலங்கரிக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்தனர். பின்னர் தீபா ராதனைகளும் நடந்தது.