ஒருவருக்கு நல்ல வேலை மற்றும் தொழில் அமைய தொழில் காரகன் சனி பகவான் நல்ல நிலையில் அமைய வேண்டும். ஜாதகத்தில் சனி, அஸ்தங்கம் நீசம் வக்கிரம் அடைந்து இருந்தால் 29 வயதுக்கு மேல தான் வேலை செட் ஆகும். மேலும் வேறு சில கிரக அமைப்பு காரணமாகவும் வேலையில் பிரச்சனை ஏற்படும். அவர்கள் கீழ்க்கண்ட பரிகாரத்தினை செய்து வர, கூடிய விரைவில் வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.

சரி வாருங்கள் பரிகாரத்திற்குள் செல்லுவோம்.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு சனி பகவானின் அருளைப் பெற வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். சனிபகவானின் அகோர பார்வை நம்மீது இருந்தாலும் வேலை கிடைப்பதில் பிரச்சனையாக இருக்கும். எனவே வாரந்தோறும் சனிக்கிழமை அன்று சனி பகவானின் முன் நின்று, நல்லெண்ணை தீபம் ஏற்றி சனிபகவானை வணங்கி வர, விரைவில் நல்ல வேலை கிடைத்துவிடும்.

ஹனுமன் ஒவ்வொருவரையும் துன்பத்திலிருந்து விடுபட்டு நல்வழி காண்பிப்பவர். அனுமனை மனதார நினைத்து கொண்டால் மட்டுமே போதும், உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து விடுவார். அவ்வாறு காலையில் குளித்து முடித்தவுடன் அனுமனின் மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொள்ளுங்கள். வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வியாழன் கிழமையில் அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனை வழிபட்டு வர, விரைவில் உங்களுக்கு தகுந்த வேலை கிடைத்துவிடும்.

ஒருவருக்கு மிகவும் முக்கியமான தெய்வம் என்றால் அது அவரவர் குடும்பத்தில் வழிபடும் குலதெய்வம் மட்டும் தான். அதிலும் நமது இக்கட்டான சூழ்நிலைகளில் குலதெய்வத்தை வழிபட்டு வந்தால், குலதெய்வம் உடனே ஓடி வந்து உங்களது பிரச்சனைக்கு தீர்வு கொடுத்து விடும். எனவே குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்து வந்தால் உங்கள் வேலை பிரச்சனையும் உடனே சரியாகிவிடும்.

அவ்வாறு ஞாயிற்று கிழமை அன்று காலை மொட்டை மாடியில் வாழை இலை விரித்து, அதில் ஒரு கைப்பிடி கோதுமை மாவை வைத்து விளக்கு ஏற்றி சூரிய பகவானை வழிபட வேண்டும். இவ்வாறு சூரிய பகவானின் அருள் கிடைத்து விட்டால் நீங்கள் நினைத்த வேலை உடனடியாக உங்களுக்கு கிடைத்துவிடும்.

இவ்வாறு வேலை கிடைக்காமல் நீங்கள் துன்பப்படுவதற்க்கு நீங்கள் செய்த பாவங்களும் கூட காரணமாக இருக்கலாம். எனவே முடிந்தவரை வாயில்லா ஜீவனுக்கு உணவு அளியுங்கள், இல்லாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து வாருங்கள். இவ்வாறு தானம் செய்வதும் உங்களின் பாவங்களை குறைத்து, நீங்கள் எதிர்பார்க்கும் வேலை மற்றும் அனைத்து செல்வங்களையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடும்.