குறள் : 1067
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.
மு.வ உரை :
இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.
கலைஞர் உரை :
கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்
சாலமன் பாப்பையா உரை :
பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம் எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன்.
Kural 1067
Irappan Irappaarai Ellaam Irappin
Karappaar Iravanmin Endru
Explanation :
I beseech all beggars and say If you need to beg never beg of those who give unwillingly.
Horoscope Today: Astrological prediction for March 31, 2023
இன்றைய ராசிப்பலன் - 31.03.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
31-03-2023, பங்குனி 17, வெள்ளிக்கிழமை, தசமி திதி பின்இரவு 01.59 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. பூசம் நட்சத்திரம் பின்இரவு 01.57 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் மரணயோகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 31.03.2023 | Today rasi palan - 31.03.2023
மேஷம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். ஆரோக்கிய பாதிப்புகள் ஓரளவு குறையும்.
மிதுனம்
இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வண்டி வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வீட்டில் அமைதி குறையும். தொழில் வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன் ஓரளவு குறையும்.
கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் மறைந்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.
கன்னி
இன்று உறவினர்களால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.
துலாம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் வகையில் நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். நவீனகரமான பொருள் வாங்கும் யோகம் உண்டு.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளால் மனஉளைச்சல் உண்டாகலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.
தனுசு
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை ஏற்படும். தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகும். எதிலும் பொறுமை தேவை. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.
மகரம்
இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.
கும்பம்
இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பாதியில் தடைப்பட்ட காரியம் மீண்டும் தொடரும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்களால் மனமகிழ்ச்சி ஏற்படும்.
மீனம்
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். கவனமாக செயல்பட்டால் எதையும் சமாளிக்க முடியும்.