பன்றி இரட்டைப்படை குளம்பி வரிசையில் உள்ள ஒரு பேரினம் ஆகும். பாலூட்டி வகுப்பில் கால்களின் விரல் எழும்புகள் ஒன்றிணைந்த உடல் அமைப்பை கொண்ட விலங்குகளை இரட்டைப்படை குளம்பிகள் என்று அழைக்கிறார்கள். பன்றிகளில் 12 இனங்கள் உள்ளன. இவை இறைச்சிக்காகவும், தோலுக்காகவும், பல நாடுகளில் பண்ணைகளிலும், வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இவை அனைத்துண்ணி ஆகும்.

பன்றியை வெளிநாடுகளில் செல்லமாக வீட்டில் வளர்க்கின்றனர். இவற்றின் நடுப்பகுதி இறைச்சி பல நாடுகளில் மிகவும் விரும்பப் படுகிறது. இதன் இறைச்சியில் அதிக அளவு கொழுப்புச்சத்து நிறைந்தது. அவற்றில் பாதி நிறைவுறா ஒற்றை கொழுப்பும், 3-ல் ஒரு பாகம் நிறைசெறிவு கொழுப்பும் உள்ளது. மேலும் இவற்றில் புரதச்சத்து அதிகமாக உள்ளது.

இவற்றின் அளவு மற்றும் பதனம் செய்யும் முறையை பொருத்து கொழுப்பு மற்றும் புரதச்சத்தின் அளவுவேறுபடும். 4 பன்றி இறைச்சி துண்டுகளில் 800 மில்லிகிராம் வரை சோடியம் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது சுமார் 1.92 கிராம் அளவு உப்பிற்கு சமமாகும்.இதனைத் தவிர இரும்பு, துத்தநாகம் மற்றும் தாதுச் சத்துக்களும் நிறைந்துள்ளன.

பன்றி இறைச்சியை வெப்ப வினைக்கு உட்படுத்தும் போது கொழுப்புச் சத்து உருகிவிடும். பதனம் செய்யப்படாத பன்றி இறைச்சியை குளிர வைத்தால் பன்றிநெய் கிடைக்கும். இதில் உள்ள புரதமும், கொழுப்பும் உடல் மெலிந்தவர்களுக்கும், முதியவர்களுக்கும் தசை வளர்ச்சியை ஊக்கப்படுத்த உதவும். மேலும் ரத்த சோகை உள்ளவர்களுக்கு ரத்த உற்பத்திக்கு உதவும். இவற்றில் உள்ள ஒருசில அமினோ அமிலங்களால் மனித உடலில் நோய்கள் உருவாகும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அளவிற்கு அதிகமான அளவு கொழுப்புச் சத்து கொண்டு இருப்பதாலும் உடலுக்கு கேடு விளைவிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இருப்பினும் இவற்றின் பயன்களை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 30-ந் தேதி(இன்று) பன்றி இறைச்சி தினமாக கடைபி டிக்கப்பட்டு வருகிறது.