ராணிப்பேட்டை மாவட்டம் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் தாட்கோ அலுவலகம் திறக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது: 
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்(தாட்கோ) சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தைச் சார்ந்த மக்களை பொருளாதாரத்தில் தற்சார்பு உடையவர்களாக மாற்றிடும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் (பழைய அலுவலகம்) தாட்கோ அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. 

தாட்கோ அலுவலகம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பதிவு செய்வதற்கு விண்ணப்பதாரரின் புகைப்படம், சாதிச்சான்று, வருமானச்சான்று (ஆண்டு வருமானம் 73 லட்சத்திற்குள்), குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் தாட்கோ இணையதளம் (ஆதிதிராவிடர்களுக்கு - https://fast.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பம் செய்தோ அல்லது மாவட்ட மேலாளர் தாட்கோ அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.