ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் எதிரே அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் கலைமணி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அமிர்தவல்லி, மாவட்ட செயலாளர் ராதா, பொருளாளர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், காஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். 5 வருடம் பணி முடித்தவுடன் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மாதம் ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் உள்ளூர் பணியிட மாறுதல், வெளியூர் மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காஸ் சிலிண்டரை வைத்து கும்மியடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், ராணிப் பேட்டை மாவட்டத்தில் உள்ள 956 அங்கன்வாடி மையங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.