Velai Vaipu Mugam in Ranipettai 2022
ராணிப்பேட்டையில் உள்ள ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் 80க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதனை யொட்டி ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை 5ம் தேதி காலை 10 மணியளவில் நேர்காணல் நடக்க வுள்ளது. கல்வித்தகுதி 10, 12 ஆம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த 18வயதுக்கு மேலுள்ளவர்கள் பங்கேற்கலாம். டிரைவிங் லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவர்.
ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 27 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள வர்கள் தங்களது ஒரிஜினல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை முதலான வற்றுடன் நேரில் வருமாறு ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவிதா தெரிவித்துள்ளார்.