வேலுார் சிப்பாய் புரட்சியை நினைவு கூறும் வகையில், மக்கான் சிக்னலில் அமைந்துள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு தமிழக கவர்னர் ஆர்.என் ரவி, இன்று காலை 10 மணிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

தொடர்ந்து வேலுார் கோட்டை மைதானத்தில் ஐஎன்ஏ வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், என் சிசி மாணவர்கள், என்எஸ் எஸ் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பேசுகிறார், இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

மேலும் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர் குடும்பத்தார் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலவாரிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடுகிறார் என ராஜ் வபவன் கூடுதல் இயக்குனர் (பத்திரிகை தொடர்பு ) தெரிவித்துள்ளார்.