சோளிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி மலைக் கோயிலில் ரோப்கார் அமைவிடத்தில் நடைபெற்று வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளுக்கான ரூ. 11 கோடி மதிப்பிலான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஒப்பந்த தாரர்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில் உள்ள மலைக்கு தற்போது ரோப்கார் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோப்காரில் மலைக்கு செல்ல வரும் பக்தர்கள் காத்திருக்கும் போது அவர்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதி கட்டமைப்புகளான கழிப்பறைகள், காத்திருப்போர் அறை, பூங்காக்கள், உணவுக் கூடம் உள்ளிட்ட வசதிகளை ஆர்.காந்தி உள்ளிட்ட தன்னார்வலர்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இதற்கான கட்டமைப்பு வசதிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை 40 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்தப்பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் அமைச்சர் ஆர்.காந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்குமாறும், தேவைப்படும் உதவிகளை உடனுக்குடன் தெரி விக்குமாறும் ஒப்பந்ததாரர்களை அமைச்சர் ஆர்.காந்தி கேட்டுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் ரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.