தமிழகத்தில் பொருளா தாரத்தில் பின்தங்கிய மக்களின் நிலையை உயர்த்துவதற்காக பல இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகிறது.

அதற்காக குறைந்த விலையில் இடம், மின்சாரம், தண்ணீர் வசதி, சாலை வசதி, அடிப்படை கட்டுமான வசதிகள், வங்கி கடன், மானியம் வழங்கப்படுகிறது. இந்த தொழிற்சாலைகளில் வேலை செய்து தங்களின் பொருளாதார நிலைமை மக்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது திட்டம்.

கடந்த 10 வருடங்களாக இந்த தொழிற்பேட்டைகளில் பெரும்பாலும் வட, வடகிழக்கு மாநில தொழிலாளர்கள், பங்களாதேஷ சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இவர்கள் வேலை செய்யும் கம்பெனிகளிலேயே தங்கி சம்பளத்தை வாங்கி தங்களின் சொந்த ஊருக்கு அனுப்பி விடுகிறார்கள். இதனால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில்லை. உள்ளூர் வியாபாரிகளுக்கும் வியாபாரம் இல்லை.

தொழிற்சாலைகளில் மட்டுமின்றி பெரிய கட்டுமான பணிகளிலும் கூட பிறமாநில தொழிலாளர்களைத்தான் பார்க்க முடிகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தகுதி வாய்ந்த உள்ளூர் நபர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அதாவது 95 சதவீதம் வேலை வழங்க வேண்டும். இதற்கான சட்டம் இயற்ற வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுப்பணிகளிலும் மாநில மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரி ராணிப்பேட்டை அறிவியல் கண்டுபிடிப்பாளர் மோகனசுகுமார், இந்திய தொழிலாளர் பேரவை தலைவர் நேதாஜி,நடேசன், மற்றும் ராணிப்பேட்டை சமூக சிந்தனையாளர்கள் கூட்டமைப்பினர் ஒன்றாக இணைந்து நேற்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.