ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் 70 இவர் நேற்று முன்தினம் ஆற்றங்கரை தெருவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்
அப்போது அரக்கோணம் காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த ஒரு மினிவேன் ஆறுமுகத்தின் மீது பயங்கரமாக மோதியது இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தார் உடனடியாக அருகிலிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து புகாரின் பேரில் நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.