Today History : 11.04.2021
முக்கிய நிகழ்வுகள் :-
👉 1976ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி ஆப்பிள் 1 (Desktop Computer) உருவாக்கப்பட்டது.
முக்கிய தினம் :-
உலக பார்க்கின்சன் தினம்
🌺 ஆண்டுதோறும் ஜேம்ஸ் பார்க்கின்சன் பிறந்த தினமான ஏப்ரல் 11ஆம் தேதி, உலக பார்க்கின்சன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கை நடுக்கம் உள்ளிட்ட நரம்பியல் பாதிப்பு ஏற்படும் பார்க்கின்சன் என்னும் நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
🌺 ஜேம்ஸ் பார்க்கின்சன் (James Parkinson) 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் பிறந்தார்.
🌺 இவர் தான் பார்க்கின்சன் நோய், அதன் அறிகுறிகள், விளைவுகள் குறித்து முதல்முறையாக விளக்கினார். இது மத்திய நரம்பு மண்டல நோய் என்பதை அடையாளம் கண்டார்.
🌺 இந்த நோய்க்கு பக்கவாத நடுக்கம் (Paralysis Agitans), முடக்குவாத நடுக்கம் (Shaking Palsy) என்று பெயரிட்டார். பின்னாளில் இது 'பார்க்கின்சன் நோய்' என்று இவரது பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது.
🌺 முற்றிலும் மாறுபட்ட பல துறைகளில் ஈடுபட்டு, அவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய ஜேம்ஸ் பார்க்கின்சன் தனது 69வது வயதில் (1824) மறைந்தார்.
பிறந்த நாள் :-
ஜோதிராவ் புலே
🌟 இந்திய சமூகப் புரட்சியின் தந்தை என்று போற்றப்பட்ட ஜோதிராவ் கோவிந்தராவ் புலே (Jyotirao Govindrao Phule) 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்தார்.
🌟 சமத்துவம், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முதன்முதலாக முழங்கினார். கல்விதான் அனைத்திற்கும் தீர்வு என்பதை உணர்ந்து, 1842ஆம் ஆண்டு மகளிருக்கான பள்ளியை தொடங்கினார்.
🌟 இவர் சத்ய ஷோதக் சமாஜ் என்ற அமைப்பை 1873ஆம் ஆண்டு தொடங்கினார். இவரது 40 ஆண்டுகால சமூக சேவையைப் பாராட்டி புனேயில் 1888ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் இவருக்கு 'மகாத்மா' பட்டம் வழங்கப்பட்டது.
🌟 டாக்டர் அம்பேத்கர், ராஜாராம் மோகன் ராய் உள்ளிட்ட சமூகப் புரட்சியாளர்களுக்கு உத்வேக சக்தியாக திகழ்ந்த ஜோதிராவ் கோவிந்தராவ் புலே தனது 63வது வயதில் (1890) மறைந்தார்.
கஸ்தூரிபாய் காந்தி
🌹 தன் கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்த மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் 1869ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார்.
🌹 இவர் 1915ஆம் ஆண்டு இந்திய விடுதலை போரில் சபர்மதி ஆசிரமத்தில் தங்கி இந்திய விடுதலை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.
🌹 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது (1942) கைது செய்யப்பட்ட காந்தியுடன் கஸ்தூரிபாய் காந்தியும் கைதானார்.
🌹 பல அறப்போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திய பெருமைமிகு கஸ்தூரிபாய் காந்தி தன்னுடைய 74வது வயதில் (1944) மறைந்தார்.