தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 33 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடுகளில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக பாமகவுடன் தொகுதி பங்கீடு கடந்த 2 நாட்களுக்கு முன் நிறைவு பெற்றது. தொகுதி பங்கீட்டில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.மணி, அன்புமணி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

பாமகவுடன் தொகுதி பங்கீடு முடிந்துவிட்ட நிலையில், தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக பேசிவருகிறது. எனவே, அனைத்துக் கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு முடிந்த பிறகு, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற விவரம் அறிவிக்கப்படும் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு போட்டியிடும் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது குறித்து சென்னை தனியார் ஹோட்டலில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகளை அதிமுகவிடம் கொடுத்துள்ளது.

பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல்

* வேளச்சேரி

* சோழிங்கநல்லூர்

* கும்மிடிப்பூண்டி

* செங்கல்பட்டு

* திருப்போரூர்

* உத்திரமேரூர்

* குடியாத்தம்

* திருப்பத்தூர்

* வேப்பனஹள்ளி

* பாப்பிரெட்டிப்பட்டி

* பாலக்கோடு

* வந்தவாசி

* செஞ்சி

* மயிலம்

* திருக்கோவிலூர்

* விக்கிரவாண்டி

* ஓமலூர்

* மேட்டூர்

* பரமத்தி வேலூர்

* கீழ்வேளூர்

* குறிஞ்சிப்பாடி

* ராணிப்பேட்டை

* ஆற்காடு

* பென்னகரம்

இதில், பாமக கோரும் தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகள் அதிமுக வசம் உள்ளது. இதேபோல், பாமக விரும்பும் தொகுதியை பாஜகவும் கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.