ஆன்லைன் வழியாக யுபிஐ ( யுனிஃபைட் பேமென்ட் இன்டர்பேஸ்) மூலம் பணம் பரிமாற்றம் செய்தால் ஜனவரி 1 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில்ல் அந்த தகவல் உண்மையில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவில் பணப் பரிமாற்ற செயலிகளை கட்டுப்படுத்தும் விதமாக தேசிய பணப் பட்டுவாடா கழகம் யுபிஐ செயலியை 2008ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. இந்த செயலி மூலம் பல்வேறு பணப்பரிமாற்ற தளங்களில் சிலரை வர்த்தகம் செய்யப்பட்டு வந்தன. அதன்படி ஆன்லைன் மூலம் கூகுள்பே, பேடிஎம் உள்ளிட்ட பண பரிமாற்ற செயலிகளில் சில்லரை வர்த்தகங்களுக்கு யுபிஐ வழியாக பணம் செலுத்தினால் கட்டணமில்லா முறை நடைமுறையில் உள்ளது.

ஆன்லைன் வழியாக பணப் பரிமாற்றம் செய்வதற்கு கட்டணம் வசூலிப்பது போல, சில்லரை வர்த்தக செயல்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படலாம் என பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில், கடந்த டிசம்பம் மாத தொடக்கத்தில் வெளியான செய்திகளில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என கூறப்பட்டன. இந்த தகவலை தற்போது என்பிசிஐ மறுத்துள்ளது.

யுபிஐ பரிமாற்றங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை என விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் மூலம் சில்லரை பண பரிமாற்றம் செய்வதற்கு ஒழுங்குமுறை அமைப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.