திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி மகன் பிரகாஷ் (32). இவர் வாலாஜாபேட்டை தேங்காய் ராமசாமி தெருவில் ரூம் எடுத்து தங்கி ஆற்காடு - பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு ஹோட்டலில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

நேற்று காலை குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாத நிலையில் அவசரமாக புறப்பட்டு பைக்கில் வேகமாக அணைக்கட்டு ரோட்டில் சென்று கொண்டிருந்த போது பெட்ரோல் பங்க் அருகே எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். 

தகவல் அறிந்த வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.