ராணிப்பேட்டை அடுத்த அக்ராவரம் மலைமேடு முருகன் கோயில் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
ராணிப்பேட்டை அடுத்த அக்ராவரம் மலைமேடு மலை பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் தினந்தோறும் பூஜைகள் மாதம்தோறும் பவுர்ணமி பூஜைகள் நடக்கிறது . மேலும் ஆண்டுதோறும் பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு வந்து முருகனுக்கு படைத்துச் செல்வார்கள். மலை உச்சியில் உள்ள குறை தீர்க்கும் முருகன் கோயிலுக்கு செல்லும் சாலையானது ஜல்லி பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது .
இதை சம்பந் தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு மேற்கண்ட சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அக்ராவரம் கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .