ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கோட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில் நிர்வாக நலன் கருதி 4 விஏஓகளை டிரான்ஸ்பர் செய்தும், 4 விஏஓகளுக்கு கூடுதல் பொறுப்பு அளித்தும் சப்கலெக்டர் பாத்திமா உத்தர விட்டுள்ளார்.

அதன் விபரம்: தக்கோலம் 2 விஏஓ முகமது இலியாஸ் இலுப்பை தண்டலம் 'கிராமத்துக்கும், துரைப்பெரும்பாக்கம் விஏஓ விக்னேஷ் குமார் கரிவேடு கிராமத்துக்கும், சிறுகரும்பூர் விஏஓ கருத்திருமன் வேகாமங்கலம் கிராமத்துக்கும், சங்கரன் பாடி விஏஓ அரவிந்த் சிறுகரும்பூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் பேட்டை விஏஓ வெங்கடேசன் கோணலம் கிராமத்துக்கும், பின்னாவரம் விஏஓ சங்கீதா சித்தூர் கிராமத்துக்கும், ஈராளச்சேரி விஏஓ பரலாஜி துரைப்பெரும்பாக்கத்துக்கும், களத்தூர் விஏஓ சதீஷ் குமார் சங்கரன்பாடி கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் உடனடியாக அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பணியில் சேர வேண்டும் என்று சப்கலெக்டர் கூறியுள்ளார்.