மத்தி மீன் நன்மைகள் | Mathi Fish Benefits in Tamil
பெரும்பாலான நடுத்தர மக்களின் வீட்டில் ஞாயிறுகளில் கமகமக்கும் குழம்பு, மத்தி மீன் குழம்பு. மற்ற மீன்களோடு ஒப்பிடுகையில் மத்தி மீனின் விலை மிகவும் குறைவு தான். விலையில் குறைவாக இருந்தாலும், நலனில் நிறைவானது மத்தி மீன். கண், இதயம், நீரிழிவு, எலும்பின் வலிமை என உடல் முழுக்க பல நலனை தருகிறது மத்தி மீன். உங்கள் உணவுப் பழக்கத்தில் மத்தி மீனை சேர்த்துக் கொள்வதால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது....
Sardine Fish Benefits in Tamil: 🐟
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் :
நீரிழிவு நோய் உள்ளவர்கள் மத்தி மீன் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாகி, இரத்தத்தில் இருக்கும் சர்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டவர முடியும்.
எலும்புகள் வலிமையடையும் :
மத்தி மீனில் இருக்கும் கால்சியம் சத்து எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் நல்ல பலனளிக்கிறது.
இதய பாதிப்பை குறைக்கும் :
மத்தி மீனில் இருக்கும் வைட்டமின் பி 12 உடலில் இருக்கும் ஹோமோசைஸ்டீன் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்கள் பாதிப்படைவதை தடுக்கிறது.
முன் கழுத்துகழலை நோய் :
மத்தி மீனில் இருக்கும் அயோடின் தாதுசத்து முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது
கால்சியம் மாத்திரைகள் :
மத்தி மீனில் செல்களில் இருந்து தான் கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாத்திரைகளை சாப்பிடுபவர்களுக்கு சருமம் பளிச்சிடும்.
கண்பார்வை அதிகரிக்கும் :
மத்திமீனை உணவில் சேர்த்துக் கொள்வதால் கண்பார்வை குறைபாடுகள் நீங்கி. பார்வை திறன் அதிகரிக்கும்.
டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள் :
விலையில் குறைவாகவும், நலனில் நிறைவாகவும் இருக்கும் மத்தி மீனை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வதால் உங்களக்கு நல்ல உடல்திறன் கிடைக்கப் பெரும்.