குறள் : 1204
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.
மு.வ உரை :
எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! (அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோமோ?
கலைஞர் உரை :
என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?.
சாலமன் பாப்பையா உரை :
என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?.
Kural 1204
Yaamum Ulengol Avarnenjaththu Ennenjaththu
Oo Ulare Avar
Explanation :
He continues to abide in my soul do I likewise abide in his ?
Horoscope Today: Astrological prediction for August 16, 2023
இன்றைய ராசிப்பலன் - 16.08.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
16-08-2023, ஆடி 31, புதன்கிழமை, அமாவாசை பகல் 03.08 வரை பின்பு வளர்பிறை பிரதமை. ஆயில்யம் நட்சத்திரம் மாலை 04.57 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். ஆடி அமாவாசை விரதம். (வாக்கியம்)
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் 16.08.2023 | Today rasi palan - 16.08.2023
மேஷம்
இன்று குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். அரசு வழியில் அனுகூலம் கிட்டும்.
ரிஷபம்
இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்பாக செயல்பவீர்கள்.
மிதுனம்
இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகையை கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
கடகம்
இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தொழிலில் சற்று மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பணி சுமை குறையும்.
கன்னி
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும்.
துலாம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் அமோகமாக இருக்கும். கடன்கள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானம் தேவை.
தனுசு
இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் இருக்கும். தேவையில்லாத பிரச்சனைகள் உங்களைத் தேடி வரும். உங்கள் ராசிக்கு மாலை 4.57 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.
மகரம்
இன்று நீங்கள் உடல் சோர்வுடனும் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு மாலை 4.57 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.
கும்பம்
இன்று குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். தொழிலில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.