வாலாஜா கோர்ட் வளாகத்தில் தகராறில் ஈடுபட்ட பைனான்சியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆற்காடு மேட்டு தெருவை சேர்ந்தவர் சரவணன் (38), பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் ஆற்காடு அடுத்த மல்லிகாபுரம் கிராமத்தை சேர்ந்த இளவரசன் (38) என்பவருக்கு கடந்த 2018ம் ஆண்டு சரவணன் 26 லட்சம் கடன் தொடுத்தார்.. பணத்தை சரவணன் திருப்பி கேட்டதற்கு தரமுடியாது கூறியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சரவணன் கடந்த ஆண்டு 2020ம் வாலாஜா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக அவ்வப்போது இருவரும் வாலாஜா கோர்ட்டுக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் இருவரும் விசாரணைக்கு வந்தபோது. கோர்ட் வளாகத்தில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னர், கைகலப்பாக மாறியது. இதில் வரதராஜபுரம் கிராமத்தை சேர்ந்த இளவரசனின் நண்பர் சரவணன்(42) என்பவர் பைனான்சியர் சரவனனை தாக்கியுள்ளார்,

உடனே இருவரும் தாக்கி கொண்டனர். இதில், காயமடைந்த இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து இருதரப்பினர் அளித்த புகாரின்பேரில் வாலாஜா போலீசார் வழக்குப்பதிந்து பைனான்சியர் சரவணன் மற்றும் மற்றொரு சரவணனை கைது செய்தனர்.