குறள் : 1127
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
மு.வ உரை :
எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார் ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.
கலைஞர் உரை :
காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்
சாலமன் பாப்பையா உரை :
என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.
Kural 1127
Kannullaar Kaadha Lavaraakak Kannum
Ezhudhem Karappaakku Arindhu
Explanation :
As my lover abides in my eyes I will not even paint them for he would (then) have to conceal himself.
Horoscope Today: Astrological prediction for May 31 2023
இன்றைய ராசிப்பலன் - 31.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
31-05-2023, வைகாசி 17, புதன்கிழமை, ஏகாதசி திதி பகல் 01.46 வரை பின்பு வளர்பிறை துவாதசி. அஸ்தம் நட்சத்திரம் காலை 06.00 வரை பின்பு சித்திரை. மரணயோகம் காலை 06.00 வரை பின்பு சித்தயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 31.05.2023 | Today rasi palan - 31.05.2023
மேஷம்
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பெரியவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை தரும். கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எந்த வேலையிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
மிதுனம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமற்ற பலன் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். முடிந்த வரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெற்று எதையும் சமாளிப்பீர்கள். தெய்வ வழிபாடு நல்லது.
கடகம்
இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
கன்னி
இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நட்பு உண்டாகும்.
துலாம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படலாம். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினை ஓரளவு குறையும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தையில் நல்ல செய்தி கிடைக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பு மரியாதை மேலோங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
தனுசு
இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் அனுபவமுள்ள பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.
மகரம்
இன்று வெளிப் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கலாம். குடும்பத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வேலையில் கவனம் தேவை.
மீனம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.