தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தாலும் இடையிடையே கோடை மழை பெய்தது என்பதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்ததால் பூமி குளிர்ச்சி அடைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் நாளை முதல் கோடை மழை இனி இருக்காது என்றும் அதுமட்டுமின்றி அதிகபட்ச வெப்ப நிலையாக வெயில் சுட்டெரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

நாளை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், கரூர் உள்பட 22 மாநிலங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை இருக்கும் என்றும் வழக்கத்தைவிட 5 டிகிரி பாரன்ஹீட் அதிக வெப்பம் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ஏப்ரல் 21 22 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம்,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகை,மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்றும் அதனால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்றும் அதிக அத்தியாவசியம் இருந்தால் மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இதுநாள்வரை இடையிடையே மழை பெய்து வந்த நிலையில் இனி மழையும் இருக்காது என்றும் அதிக வெப்பநிலையும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மே 4 ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரத்தின் ஆட்டம் ஆரம்பமாகப்போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது