சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ராணிப்பேட்டையிலிருந்து திருவண்ணாமலைக்கு 300 போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுளர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். 

மேலும், கார்த்திகை தீபம் மற்றும் சித்ரா பவுர்ணமி போன்ற விஷேச நாட்களில் பல லட்சம் பக்தர்கள் 14 கி.மி. தொலைவில் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்வார்கள். இந்நிலையில், இன்று மற்றும் நாளை கிரிவலம் செல்ல உகந்த நாட்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிரிவலம் செல்ல பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் வர உள்ளனர். 

பாதுகாப்பு பணிக்கு ராணிப்பேட்டை எஸ்பி கிரண்ஸ்ருதி தலைமையில் ஏடிஎஸ்பி 2பேர், டிஎஸ்பி, 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 300 பேர் நேற்று பாதுகாப்பு பணிக்காக திருவண்ணாமலைக்கு சென்றனர்.