முருக வழிபாட்டில் தொன்மை வாய்ந்தது வேல் வழிபாடு. நம்முடைய முன்னோர்கள் வீட்டிலேயே வேல் வைத்து வணங்கிக் கொண்டிருந்தனர். சக்திவேலை வணங்குவது என்பது அன்னை பராசக்தியையும், மகன் முருகனையும் ஒருசேர வணங்குவதாகும். இன்றும் பல முருகன் கோவில்களில் வேலுக்கு மட்டுமே பூஜை செய்து கொண்டிருக்கின்றனர்.
புராண மரபுப்படி, சூரபத்மனை வதம் செய்வதற்காக ஆதிசக்தியான அன்னை பராசக்தியால் முருகனுக்கு அருளப்பட்ட பெருமை பொருந்திய வேல் சக்திவேல். சூரனை சம்ஹாரம் செய்ய சிக்கலில் வேல் வாங்கும் போது முருகனுக்கு வியர்வை பெருகும்.
Worship with a vel Pooja at home importance and benefits
முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு வெற்றிவேல் என்று பெயர். பரம்பொருளின் பேரருள், பேராற்றல், பேரறிவு ஆகிய மூன்றும் நிறைந்து, உயிர்களின் எளிய இயல்புக்கேற்ப இயங்கிப் பிறங்குவதே வேலின் உருவமாய் உள்ளது.
எல்லாவற்றையும் வெல்வது வேலாயுதம். இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல, உட்பகையையும் அழிக்கும். பராசக்தியின் வடிவமே வேலாயுதம் என்பார்கள். அறிவு, ஞானம், பொருள், இன்பம், திருவருள், திருவருட் சக்தி முதலிய சொற்கள் வேலின் உருவாய் உள்ள பராசக்தியையே குறிப்பனவாகும்.
சூரனை அழிக்க வேல் ஏவிய செய்தியைச் சொல்ல வந்த அருணகிரியார், சிவம் எனும் அஞ்செழுத்தை முந்த விடுவோனே என்று குறிப்பிடுவார். எனவே, வேலாயுதத்துக்கு மேலாயுதம் எங்கும் இருப்பதற்கில்லை.
அறிவுக்கு மூன்று இலக்கணங்கள் உண்டு. அவை ஆழம், அகலம், கூர்மை என்பன. அறிவு ஆழமாக இருக்கும்; பரந்து விரிந்து விளங்கும்; கூர்மையாகத் திகழும். வேலின் அடிப்பகுதி ஆழமாக அமைந்துள்ளது. இடைப்பகுதி விசாலமாக விளங்குகிறது. நுனிப் பகுதி கூர்மையாகத் திகழ்கிறது.
வேல் வினைகளை வேரறுக்க வல்லது. வேலுண்டு வினையில்லை என்பது அருளாளர் வாக்கு. அச்சம் அகற்றும் அயில் வேல் எனச் சிறப்பிக்கிறார் குமரகுருபரர். வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன் என்று கந்தரநுபூதியும், வினை எறியும் வேல் என்று திருப்புகழும் போற்றுகின்றன.
முருகனுக்கு உகந்த சஷ்டி: வேல் யாத்திரை இன்று தொடங்கி டிசம்பர் 6 வரை நடத்த திட்டமிட்டது ஏன் சக்திவேல் வழிபாடு என்பது இராஜ அலங்கார முருகன் படத்துக்கு அருகே உருவேற்றப்பட்ட சக்திவேலை வைத்து நாள்தோறும் வணங்குவது. சக்திவேலை உருவேற்றுதல் என்பது சக்திவேலுக்கான சூட்சுமசக்தியை வழிபாட்டின் மூலமாக அதிகரித்துக் கொண்டே செல்வது.
செய்யும் காரியங்களில் தடைகள் விலக, நீண்ட நாட்களாய் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்க, கல்வியில் மேன்மை பெற, மன பயம் நீங்கி வலிமை உண்டாக, வியாபாரத்தில் லாபம் பன்மடங்காய்ப் பெருக, பில்லி சூனியம் அணுகாதிருக்க, நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் நீங்க, பூத பிரேத பிசாசுகளின் தொல்லைகளில் இருந்து விடுபட, சகல சம்பத்துகளும் கிடைக்க, சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க, அரசு மற்றும் தனியார் வேலை கிடைக்க வேல் பூஜை செய்யலாம்.
மரண பயம் நீங்கி நீண்ட ஆயுள் பெற, விதியால் வரும் ஆபத்துகள் விலக, தடைபெற்று நிற்கும் திருமணம் நடைபெற, சொந்தமாய் வீடு வாங்க, கெட்ட கனவுகள் வராமல் இருக்க, நினைத்த காரியம் நினைத்தப்டியே நிறைவேற, பொன் வெள்ளி ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்க, தனதான்யங்கள் மேலும் பெருக, கலைகளில் தேர்ச்சி பெறவும் வேல் பூஜை செய்வது சிறப்பு.
எதிரிகளால் ஏற்படும் பயம் நீங்க, தாமதமாகும் திருமணம் விரைவில் நடைபெற, எதிர்மறைச் சக்திகளின் பாதிப்பிலிருந்து விலக, பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருக, உயர்ந்த பதவிகள் பெற, வாக்கு வளம் பெற, விபத்துகள் ஏற்படாமல் இருக்க சக்திவேலை வணங்கலாம்.
ஒவ்வொரு நாள் காலையும் சூரிய உதயத்துக்கு முன்னதாக சக்திவேலை வழிபடுதல் சிறப்பு. சக்திவேலினை வீட்டிலோ, அலுவலகத்திலோ வைத்துக் கொள்ளலாம். அலுவலகத்தில் சக்திவேலை வைப்பதானால், அலுவலகம் சென்றவுடன் சக்திவேலை வணங்கிவிட்டே பணிகளைத் துவக்க வேண்டும். மனம் பாரமாக இருக்கும் நேரங்களில் மனதுக்குள் சக்திவேலை நினைத்துக் கொண்டு ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க எனச் சொல்லி வர மனம் இலேசாகி விடும்.
சக்திவேலைத் தொடர்ந்து வழிபட்டுக் கொண்டிருப்பதன் வழியாக அதன் சூட்சுமசக்தியை அதிகரித்துக் கொண்டே செல்லும். ஆக, சக்திவேலை வணங்க நாள்தோறும் ஐந்து நிமிடங்களாவது மறவாமல் ஒதுக்கிக்கொள்ளுங்கள். காலை, மாலை அல்லது இருவேளைகளிலும் சக்திவேலை வழிபடலாம்.