ராணிப்பேட்டை பகுதியில் இன்று நடைமுறைக்கு வருவதாக இருந்த மின்நிறுத்தம், தை அமாவாசை காரணமாக ரத்து செய்யப்படுகிறது.
ராணிப்பேட்டை, சிப்காட், வாலாஜா, ஒழுகூர், மாம்பாக்கம், கலவை காவேரிப்பாக்கம், ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு மின் நிறுத்தம் அறிவிக் கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தை அமாவாசை நாளான இன்று இந்துக்களில் பெரும்பாலானோர் வீடுகளில் பூஜைகள் நடக்கும்.

இதற்கு மின்சாரம் அவசிய தேவை என்பதால் இன்றைய மின் நிறுத்தத்தை தள்ளி வைக்கும்படி மக்களிடம் இருந்து ராணிப்பேட்டை கலெக்டருக்கு கோரிக்தை வந்தது.

அதன்படி கோரிக்கையை ஏற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மின்வாரிய அதிகாரிகளுடன் பேசி இன்றைய மின் நிறுத்தத்தை தள்ளி வைத்துள்ளார்.

இன்று வாலாஜா, ராணிப்பேட்டை, ஒழுகூர், காவேரிப்பாக்கம், கலவை, மாம்பாக்கம் பகுதிகளில் மின் நிறுத்தம் இல்லை.