குறள் : 963
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
மு.வ உரை :
செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும் செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.
கலைஞர் உரை :
உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்
சாலமன் பாப்பையா உரை :
நல்ல குடும்பத்தில் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்.
Kural 963
Perukkaththu Ventum Panidhal Siriya
Surukkaththu Ventum Uyarvu
Explanation :
In great prosperity humility is becoming dignity in great adversity.
Horoscope Today: Astrological prediction for December 15 2022
இன்றைய ராசிப்பலன் - 15.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
15-12-2022, கார்த்திகை 29, வியாழக்கிழமை, சப்தமி திதி பின்இரவு 01.39 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. நாள் முழுவதும் பூரம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2.
இராகு காலம் | Indraya Raagu kalam
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 15.12.2022 | Today rasi palan - 15.12.2022
மேஷம்
இன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள்.
ரிஷபம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனமாக செயல்படுவது நல்லது.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் உதவியால் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.
கடகம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கலாம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப்பலன்கள் கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.
சிம்மம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தரும். கொடுத்த கடன் வசூலாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.
கன்னி
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவு ஏற்படும். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
துலாம்
இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற பலன்கள் கிட்டும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.
மகரம்
இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுப காரியங்கள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
கும்பம்
இன்று உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும்.
மீனம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் சேரும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001