கலவை விசிக பிரமுகர் வெட்டிக் கொலை வழக்கில் வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவிற்கு உட்பட்ட கலவை அடுத்த மழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விசிக பிரமுகர் பார்த்தசாரதி (35). கடந்த ஜூலை 17ம் தேதி காலை மர்ம நபர்களால் செய்யாதுவண்ணம் சாலையிலுள்ள சுடுகாடு அருகே விவசாய நிலத்தில் கை, கால்கள், கழுத்து என பல இடங்களில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு படு கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன், உத்தரவின்பேரில் கலவை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வந்தனர். கொலை வழக்கில் 2 பேர் கோர்ட்டில் சரணடைந்த நிலையில் மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சென்னை தாம்பரம் தாலுகா சேம்பாக்கம் கந்த சுவாமி தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் விக்னேஷ்(22), கூலிப்படையை சேர்ந்தவர் என தெரியவந்தது.

இதையடுத்து, விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன், பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஓராண்டுகாலம் விக்னேஷ் (22), குண்டர் தடுப்பு சட்டம் காவலில் வைக்க ஆணையிட்டார். அதன்பேரில் விக்னேஷ் ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டார்.