ஆற்காடு அடுத்த அருங்குன்றம், பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனியன். இவரது மகன் மணிகண்டன் (எ) சிவா (23).

இவர் கடந்த 30ம் தேதி குடிப்பதற்கு பணம் கேட்டு வீட்டில் தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவர்கள் பணம் தரவில்லை.

இதனால் விரக்தியடைந்த மணிகண்டன் அருங்குன்றம் மலையடி வாரத்துக்கு சென்று விஷத்தழையை அரைத்து குடித்து மயங்கிக்கிடந்தார். இதைப்பார்த்து அவ்வழியாக சென்றவர்கள், மணிகண்டன் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் விரைந்து வந்து மணி கண்டனை மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவர் நேற்று காலை இறந்தார். இதுகுறித்து ரத்தினகிரி சப் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.