Investors besieged the house of Arudra Finance Company deputy manager and staged a road blockade


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஆருத்ரா நிதி நிறுவன துணை மேலாளர் வீட்டை முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் ஆரூத்ரா நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக மோசடி செய்ததாக சோதனை நடைபெற்ற நிலையில், முதலீட்டாளர்களுக்கு சில மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை.

இதனால் சயனபுரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான முதலீட்டாளர்கள் தலைமறைவான துணை மேலாளர் சதீஷ்குமார் வீட்டை முற்றுகையிட்டனர்.