கிருஷ்ண பகவான் விரும்பக் கூடிய 5 முக்கியமான விஷயங்கள்!


இந்தியாவில் கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளில் ஒன்று, கிருஷ்ணரின் பிறந்தநாள், ஜன்மாஷ்டமி என அழைக்கப்படும்.

கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளில், பல பக்தர்கள் விரதத்தைக் கடைப்பிடிப்பது வழக்கம். அதுமட்டுமில்லாமல் கிருஷ்ணர் விக்ரகத்திற்கு அபிஷேகம், அலங்காரம், பிடித்த பலகாரங்கள் நைவேத்தியமாகப் படைத்தல் என தொடங்கி, கிருஷ்ணரின் பாடல், பஜனைகளுக்கு நடனமாடுதல், கோலாட்டம் போன்ற விஷயங்கள் குழுவாக சேர்ந்து செய்வது வழக்கம்.

சில கிருஷ்ண பக்தர்கள் கிருஷ்ணர் வேடமிட்டும், கிருஷ்ணரின் புராண கதைகளை நாடகங்களாகப் போடுவது வழக்கம்.

கிருஷ்ணரின் பெருமைகள்:


பகவான் கிருஷ்ணர் இரக்கம், அன்பு மற்றும் மென்மை ஆகியவற்றின் கடவுளாக பார்க்கப்படுகிறது. குறும்புக்கார கடவுளான கிருஷ்ணர் குழந்தைகளுக்கும், ஆயிரக்கணக்கான கோபிகளின் இதய துடிப்பாக இருந்தவர்.

இன்றும் கிருஷ்ணரின் அற்புத கதைகள், சாகசங்கள், புத்திசாலித்தனம், ஆகியவை கேட்போரின் மனதைக் கொள்ளைக் கொள்ளும் விதமாக இருக்கும். என்ன தான் தன் நண்பர்களுடன் சேர்ந்து வெண்ணெய் திருடி தின்றாலும், அவரின் பேச்சால், செயலால் கோபியர்கள் மயங்கிக் கடந்தனர். கிருஷ்ண ஜெயந்தி தினத்தில், பகவான் கிருஷ்ண பராத்மாவுக்கு பிடித்த விஷயங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

​புல்லாங்குழல்:


கிருஷ்ண பரமாத்வாவின் பேச்சு, செயல்களால் மட்டுமல்லாமல், அவரின் புல்லாங்குழல் கானத்தால் கோபியர்களை மட்டுமல்லாமல், அவர்கள் வளர்த்து கால்நடைகளும் மயங்கி கிடந்தன. கோபியர்கள் கேட்கும் கானமாகக் கிருஷ்ணரின் புல்லாங்குழல் மெல்லிசை இருந்தது. அதனால் கிருஷ்ணர் எப்போதும் புல்லாங்குழலுடன் இருப்பது வழக்கம்.

​மயில் இறகு:


அனைத்து கடவுள்களும் தன் தலையில் கிரீடம் அணிந்திருப்பது வழக்கம். அதில் கிருஷ்ண பரமாத்மா தன் கிரீடத்தில் மிகவும் தூய்மையான, மழையின் சின்னம் என நம்பப்படும் மயில் இறகு எப்போதும் அணிந்திருப்பார். அவரின் அழகுக்கு அழகு சேர்ப்பதால் மயில் இறகுக்கு மேலும் பெருமை சேர்ந்தது என்றால் மிகையாகாது.

​​வெண்ணெய்:


கிருஷ்ணர் தனது சிறு வயதில் தன் கிராமத்தில் உள்ள வீடுகளில் திருட்டுத்தனமாகச் சென்று வெண்ணெய் திருடி நண்பர்களுடன் பகிர்ந்து உண்பது வழக்கம். வெண்ணெய் கிருஷ்ணரின் இதயத்தின் தூய்மையைக் குறிக்கிறது.

​கால்நடைகள்:


கிருஷ்ணரை நந்த கோபாலன் என்று அழைக்கப்படுகிறார். இது உண்மையில் 'பசு பாதுகாவலன்' என்று பொருள் படும். அதாவது கோகுலத்தில் வாழ்வாதாரத்திற்கான முக்கிய தொழில் கால்நடை வளர்த்தல், பால், வெண்ணெய் தயாரித்தல். கோபியர்கள் மற்றும் கால்நடைகளுடன் வளர்ந்த கோபாலன் அதை மிகவும் நேசித்ததாக நம்பப்படுகிறது.

மஞ்சள் வேஷ்டி:


பால கோபாலரின் விருப்பமான விஷயங்களைப் பற்றி பேசும் போது அவர் அணிந்திருக்கக்கூடிய மஞ்சள் வேஷ்டியும் அவருக்கு விருப்பமான ஒன்று என்பதை மறந்து விடக்கூடாது.

Krishna Jayanthi Wishes in Tamil : 


இனிய கிருஷ்ண ஜன்மாஷ்டமி 2022 வாழ்த்துக்கள். 


கிருஷ்ண ஜென்மாஷ்டமி 19 ஆகஸ்ட் 2022 அன்று கொண்டாடப்படும். இது கோகுலஷ்டிமி என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் ஆண்டு விழாவாகும். உங்கள் நெருங்கியவர்களுக்கான சில வாழ்த்துகள் மற்றும் செய்திகளை நீங்கள் தேடிக்கொண்டிருக்கலாம். எனவே இந்த பண்டிகையை கொண்டாட உங்கள் ஆயத்தங்களை தொடங்குங்கள்.

1. Gokulashtami Wishes in Tamil

வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை எதிர்த்து போராடும் தைரியத்தை கிருஷ்ணர் தருவார். இனிய கோகுலஷ்டிமி நல்வாழ்த்துக்கள்!

2. Happy Gokulashtami Wishes in Tamil

இந்த கிருஷ்ண ஜெயந்தியில் பகவான் கிருஷ்ணர் உங்களுக்கு அன்பையும், அமைதியையும், செழிப்பையும் அருளட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

3. Happy Gokulashtami Wishes in Tamil

ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா… கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே… உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட கிருஷ்ண கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்!

4. Happy Gokulashtami Wishes Images in Tamil

அன்பு என்பது ஒரு நிலையான பேரார்வம், இது ஒரு சாந்தமான நிலையான நம்பிக்கையைக் கொடுக்காது. கிருஷ்ண ஜென்மாஷ்டமி நல்வாழ்த்துக்கள்!

5. Krishna Jayanthi Wishes in Tamil

மனம் அமைதியற்றது மற்றும் அடக்குவது கடினம், ஆனால் அது பயிற்சியால் அடக்கப்படுகிறது.

6. Happy Krishna Jayanthi Wishes in Tamil 2022

மகாபாரதப் போரில் அர்ஜுனனுக்குக் காட்டிய வழியை ஸ்ரீ கிருஷ்ணர் உங்கள் வாழ்க்கையிலும் காட்டுகிறார். இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

7. Sree Krishna Jayanthi Wishes in Tamil 2022

இது சமயம், ஒன்றாகக் கொண்டாட, அனைவருக்கும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி நல்வாழ்த்துக்கள்…!!

8. Gokulashtami Wishes 2022 in Tamil

உங்களுடன் வாழ்க்கை ஒரு திருவிழா போன்றது, எனவே எப்போதும் ஒன்றாக இருப்போம் என்று உறுதியளிக்கிறோம். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்!

9. Gokulashtami Wishes 2022 Download in Tamil

குறும்புக்கார கிருஷ்ணன் தன் பிறந்தநாளைக் கொண்டாட விரும்புகிறான். அவரது ஆசீர்வாதங்களைப் பெற அவரது பிறந்த நாளைக் கொண்டாடுங்கள்.


10. Sri Krishna Jayanthi Wishes in Tamil

பகவான் கிருஷ்ணரின் போதனைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்கு மதிப்பைச் சேர்க்கவும். ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நல்வாழ்த்துக்கள்!