அம்மூர் அடுத்த கீழ் வேலத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள்(65). கணவரை இழந்து தனியாக வசித்து வந்தார்.

கடந்த ஒரு வருடமாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். பல்வேறு சிகிச்சை பெற்றும் குண மடையவில்லை. , இதனால் முனியம்மாள் நேற்று நள்ளிரவு வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீவைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர்.

வேலூர் அரசு ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்ட முனியம்மாள் நேற்று காலை இறந்தார். அவரது மகன் மனோகரன் அளித்த புகாரின்பேரில், ராணிப்பேட்டை எஸ்ஐ ஜான்சேவியர் விசாரணை நடத்தித வருகிறார்.