ISRO conducts satellite manufacturing training for government school students from Ranipet district

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இஸ்ரோ சார்பில் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து செயற்கைகோள்கள் தயாரித்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதில், தமிழகம் முழுவதும் திறமை வாய்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவர்கள் தேர்வு செய்து பயிற்சி பெற அரசு சார்பில் அனுப்பபட்டு வருகிறது.

அதன்படி, 75வது சுந்திர தினத்தையொட்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் 7 நாட்களில் 75 செயற்கைகோள்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். இந்த பயிற்சியில் பங்கேற்க ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் கல்வி மாவட்டம் சார்பில் 8 பள்ளி மாணவர்கள் நாளை செல்ல உள்ளனர். இதில் பரமேஸ்வரிமங்கலம், காவேரிப்பாக்கம், மூதனூர், குருவராஜபேட்டை ஆகிய பள்ளிகளிலிருந்து தலா 2 பேர் விதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் அப்துல்கலாம் தொண்டு நிறுவனம் சார்பில் ராமேஸ்வரத்தில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் மினி செயற்கைகோள் தயாரித்து விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.