Terrible fire accident at Kamal textile shop in Arcot


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலானபுதிய ஆடைகள் தீயில் கருகி நாசமானது.

ஆற்காடு பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த 4 அடுக்குமாடிகளைக் கொண்ட இந்த தனியார் துணிக்கடையில் தீவிபத்து ஏற்பட்டது. கடையின் வாயிலில் பற்றிய தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.

தகவல் அறிந்ததும் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.