🌐 1966ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி விக்கிப்பீடியாவை துவக்கிய ஜிம்மி வேல்ஸ் பிறந்தார்.

✍ 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் மறைந்தார்.

👉 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒன்டாரியோவிற்கும், நியூயார்க்கிற்கும் இடையே அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.

💻 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி திட்டமிட்டபடி முதல் கணிப்பானை (ஹார்வார்ட் மார்க்) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.

📻 1955ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி சோனி நிறுவனம் தனது முதல் திரிதடை வானொலியை ஜப்பானில் விற்க துவங்கியது.


நினைவு நாள் :-

வாணிதாசன்
👉 தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் வாணிதாசன் 1915ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு, புனைப்பெயர் ரமி என்பதாகும். 

👉 இவருடைய பாடல்கள் 'தமிழ் கவிதைக் களஞ்சியம்' வெளியிட்ட புதுத்தமிழ் கவிமலர்கள் என்ற நூலிலும், ஏனைய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன. 

👉 இவர் 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். தமிழச்சி, கொடிமுல்லை ஆகிய சிறு காப்பியங்களையும், தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் ஆகிய கவிதை நூல்களையும் வழங்கியுள்ளார். எனினும் வாணிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பே பெரும் புகழ் பெற்றது.

👉 கவிஞரேறு, பாவலர் மணி, தமிழ்நாட்டுத் தாகூர், புதுமை கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட வாணிதாசன் தனது 59வது வயதில் 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-

எம்.எஸ்.சுவாமிநாதன் 
🌾 பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி கும்பகோணத்தில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன். 

🌾 இவருடைய பெற்றோருக்கு இவர் மருத்துவராக வேண்டும் என்ற ஆசை. ஆனால், வங்கத்தில் 1942-ல் ஏற்பட்ட பஞ்சத்தால் இவர் வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தார். 

🌾 இவர் ஐபிஎஸ் அதிகாரியாக 1948-ல் தேர்வானார். ஆனால், பணியில் சேரவில்லை. சிறந்த ஆராய்ச்சியாளரான இவர், நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார்.

🌾 1960களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது 'இந்தியர்களால் உணவு உற்பத்தி செய்ய முடியாது. பசியால் கொத்துக் கொத்தாக உயிரிழப்பார்கள்' என்று பல நாடுகள் கூறினர்.

🌾 இதை பொறுத்துக்கொள்ள முடியாத இவர், ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, 200 சதவீத லாபத்தை சாதித்துக் காட்டினார். இதை 'கோதுமைப் புரட்சி' என்று பாராட்டினார் பிரதமர் இந்திரா காந்தி.

🌾 ராமன் மகசேசே விருது(1971), உலக உணவு பரிசு(1987), யுனெஸ்கோ மகாத்மா காந்தி விருது (2000), இந்திரா காந்தி தேசிய ஒருமைபாட்டுக்கான விருது(2013), பத்மஸ்ரீ(1967), பத்ம பூஷண்(1972), பத்ம விபூஷண்(1989) உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். 

🌾 வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய எம்.எஸ்.சுவாமிநாதன் தனது 92வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.